Home இலங்கைசரண குணவர்தனவுக்கு 3 வருட கடூழிய சிறை

சரண குணவர்தனவுக்கு 3 வருட கடூழிய சிறை

by admin


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவினால் இன்று (07) இந்த தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மோசடியான நிதி பரிவர்தனைகளின் ஊடாக அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு மே மாதம் 05ஆம் திகதி முதல் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சரண குணவர்தன, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த போது இந்த ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது  #சரணகுணவர்தன  #கடூழியசிறை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More