Home இந்தியாரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பிணை

ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பிணை

by admin


முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பிணை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ரவிச்சந்திரனுக்கு ஒருமாத காலம் பிணை வழங்க கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிடம் கோரியிருந்தார்.

அந்த கோரிக்கை அடங்கிய மனுவை நீதிபதிகளான ராஜா, புகழேந்தி அமர்வு விசாரணைக்கு உட்படுத்திய நிலையில் அவருக்கு இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான 15 நாட்களுக் சாதாரண பிணை வழங்கி நீதிபதிகள் உத்தவிட்டனர்.

இதுவரை 4 முறை ரவிச்சந்திரன் பிணையில் சென்றுள்ள நிலையில் அதனை பயன்படுத்தி அவர் எவ்வித அசம்பாவிதங்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை. இதனை அடிப்படையாக கொண்டே அவருக்கு மீண்டும் 15 நாட்கள் பிணை வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ளதால் அவருக்கு பிணை வழங்குவதில் ஆட்சேபனை இல்லை எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதே குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கும் அண்மையில் ஒரு மாத பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.  #ரவிச்சந்திரன்  #பிணை #ராஜீவ்காந்தி #பேரறிவாளன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More