Home இலங்கைஅமெரிக்கா – ஈரானில் போர் பதட்டம் – யாழில் எரிபொருள் நிலையங்களுக்கு மக்கள் படையெடுப்பு…

அமெரிக்கா – ஈரானில் போர் பதட்டம் – யாழில் எரிபொருள் நிலையங்களுக்கு மக்கள் படையெடுப்பு…

by admin

அமெரிக்கா – ஈரான் போர் பதட்டத்தின் எதிரொலியாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனும் அச்சத்தில் யாழில் எரிபொருளை வாங்கி சேமிப்பதற்கு மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நோக்கி படையெடுத்துள்ளனர்.

வளைகுடாவில் அண்மைய நாட்களாக ஏற்பட்டுள்ள அமைதியின்மை காரணமாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனும் அச்சம் மக்கள் மத்தியில் எழுந்த நிலையில் நேற்று புதன்கிழமை மாலை முதல் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் மத்தியில் வதந்தி பரவியது.

அதனை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களை நோக்கி நேற்று புதன்கிழமை இரவு தொடக்கம் மக்கள் படையெடுத்துள்ளனர். இதனால் எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக நீண்ட வரிசையில் நின்று தமது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதுடன், வீடுகளில் இருந்து எடுத்து வந்த கான்களில் மேலதிக எரிபொருள்களையும் வாங்கி செல்கின்றனர் . இதனால் நேற்று இரவு முதல் யாழில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக மக்கள் எரிபொருளுக்காக குவிந்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More