Home இந்தியாஉத்தரபிரதேசத்தில் பார ஊர்தியுடன்  மோதிய சொகுசு பேருந்து தீயில் கருகிறது – 20 பேர் பலி?

உத்தரபிரதேசத்தில் பார ஊர்தியுடன்  மோதிய சொகுசு பேருந்து தீயில் கருகிறது – 20 பேர் பலி?

by admin

உத்தர பிரதேசத்தில் சொகுசு பேருந்தும்  பார ஊர்தியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு வாகனங்களும் தீ பிடித்து எரிந்தன. இதில், பேருந்தில் பயணித்த 20 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டம், குர்சகாய்கஞ்ச் பகுதியில் இருந்து நேற்று இரவு ஜெய்ப்பூர் நோக்கி, படுக்கை வசதியுடன் கூடிய  சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து, கன்னாஜ் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் சிலோய் கிராமம் அருகே சென்றபோது, எதிரே சென்றுகொண்டிருந்த  பார ஊர்தியுடன்  மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீ பற்றி எரிந்தன. தீ பிடித்ததால், பேருந்தில் இருந்த பயணிகள் அபயக்குரல் எழுப்பினர். தகவல் அறிந்து விரைந்து சென்ற  தீ அணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 21 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெகுநேரமாகியும் 20 பேரை மீட்க முடியாததால், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More