125
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் நேற்று (18.01.20) மாலையில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையினை கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி தற்காலிமாக நிறுத்தியது. இந்த ஜனாதிபதி ஆணைக்குழு இதுவரை 39 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. இதில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உட்பட சமயத் தலைவர்களும் அடங்குகின்றனர்.
முன்னாள் சிரேஷ்ட உதவி காவற்துறை மா அதிபர் மெரில் குணரட்ன நேற்று வாக்குமூலம் அளித்தார். விசாரணை ஆணைக்குழு இன்று காலை மீண்டும் கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love