Home இலங்கைவரணிக் குளத்தில் குளித்தவர் பிணமானார்….

வரணிக் குளத்தில் குளித்தவர் பிணமானார்….

by admin

வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் குளித்துக்கொண்டிருந்த நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் நபரொருவர் இன்று செவ்வாய்க்கிழமை நீராடியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் காணாமல் போயுள்ளார். அதனை அடுத்து, அங்கிருந்தவர்கள் குறித்த நபரை தேடினார்கள். அதேவேளை அது தொடர்பில் காவற்துறையினருக்கும் அறிவித்தனர். சிறிது நேர தேடுதலின் பின் குறித்த நபர் குளத்தினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த காவற்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் உயிரிழந்தவரை அடையாளம் காணும் வகையிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More