இலங்கை பிரதான செய்திகள்

இந்திய குடியரசு நாளின் 70வது ஆண்டுவிழா யாழில்..

யாழ் இந்தியதுணைத் தூதரகம்
யாழ்ப்பாணம்
ஊடகஅறிக்கை

இந்தியாவின் குடியரசுநாளின் 70வது ஆண்டுவிழாவை முன்னிட்டு இன்று (26.01.2020) யாழ் இந்தியதுணைத் தூதரகத்தின் குடியரசுநாள் நிகழ்வுகள் காலையில் தூதரகத்திலும் முற்பகல் Tilko hotelலிலும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது.முன்னதாக இந்தியத் துணைத் தூதுவர் பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படையின் தன்னுயிரை தியாகம் செய்தவர்களின் நினைவாலயத்தில் யாழ் கட்டளைத் தளபதி ருவான் வணிக சூரியவுடன் இணைந்து மலர் அஞ்சலி செலுத்தினார்.

2. காலை நிகழ்வுகள் காலை 9.00 மணிக்குயாழ் இந்தியத் துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தூதரக அலுவலர்கள் வடமாகாணத்தில் வசிக்கும் இந்தியகுடிமக்கள் மற்றும் இந்தியவம்சாவழியினர், இந்தியநலன் விரும்பிகள், ஊடகவியலாளர்கள் என100ற்கும் மேற்பட்டபலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

3. இந்தியநாட்டுப்பண் பாடப்பட்டதைத் தொடர்ந்து இந்தியகுடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டகுடியரசுநாள்வாழ்த்துச் செய்தி இந்தியதுணைத் தூதுவரால் வாசித்தளிக்கப்பட்டது.

4. வரவேற்புநிகழ்வுகள் முற்பகல் 10.00 மணிக்கு  ஆரம்பிக்கப்பட்டது. வடமாகாணஆளுனர் திருமதிசாள்ஸ், வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கேசிவஞானம், யாழ் மாநகரசபைமுதல்வர் ஆர்னோல்ட், பாராளுமன்றஉறுப்பினர்கள், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர், முப்படைகளின் அதிகாரிகள், காவல் அதிகாரிகள், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், அமைச்சர்கள்மற்றும் மூத்தஅதிகாரிகள், இராஜதந்திரகுழுக்களின் உறுப்பினர்கள்,யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி, பல்கலைக்கழக பேராசிரியர்கள், அரசியல் தலைவர்கள், இந்தியகுடிமக்கள், தூதரக அலுவலர்கள்மற்றும் இந்திய வம்சாவழியினர், ஊடகவியலாளர்கள்  என 500ற்கும் மேற்பட்டபலரும் கலந்துகொண்டனர்.

5. நிகழ்வில் இந்தியதுணைத் தூதுவரின் வரவேற்புஉரை இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில்; இருந்துவருகைதந்தஸ்ரீமதியோகவந்தனாகுழுவினரின் வீணை இசைக் கச்சேரியும் ஜெயஸ்ரீ குழுவினரின் கதக் நடனமும் அரங்கேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்துயாழ்ப்பாணம் பாசையூர் சென் அன்ரனிஸ் கலைக்கழகத்தினரின் வீரபாண்டியகட்டபொம்மன் நாட்டுக்கூத்தும் இடம் பெற்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.