Home இலங்கையாழ் சுண்டுக்குளியில் கேரளக் கஞ்சாவுடன்குடும்பஸ்த்தர் கைது…

யாழ் சுண்டுக்குளியில் கேரளக் கஞ்சாவுடன்குடும்பஸ்த்தர் கைது…

by admin

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் உள்ள வீடொன்றிலிருந்து 142 கிலோ கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், அதனைப் பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று காவற்துறையினர் தெரிவித்தனர். சுண்டுக்குளி, பழைய பூங்கா வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.

“யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்பு காவல் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவற்துறையினர் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது அங்கு பதிக்கிவைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் நிறை 142 கிலோ 945 கிராம் என எடையிடப்பட்டுள்ளது. சுமார் ஒரு கோடியே 50 லட்சம் பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதனை வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொழும்பில் வசித்துவிட்டு திருமணத்தின் பின் குறித்த விலாசத்தில் வசித்து வருகிறார்.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் காவல்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கஞ்சா போதைப்பொருளும் காவல்  நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது” என்று காவற்துறையினர்  தெரிவித்தனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More