Home இலங்கைஇலங்கை வரலாற்றில்  குறுகிய காலப்பகுதிக்குள் அமைக்கப்படும் வைத்திய முகாம்…

இலங்கை வரலாற்றில்  குறுகிய காலப்பகுதிக்குள் அமைக்கப்படும் வைத்திய முகாம்…

by admin

சீனாவிலிருந்து இலங்கை திரும்பும் பல்கலைகழக மாணவர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக 48 மணி நேரத்திற்குள் இலங்கை இராணுவம் வைத்திய முகாம் ஒன்றை அமைத்து வருகின்றது.

இரண்டு அறைகள் கொண்ட இந்த வைத்திய முகாமில் சீனாவிலிருந்து நாடு திரும்பும் மாணவர்கள் இரண்டு வாரங்கள் தங்கவைக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தபடுவார்கள்.

சீனாவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகின்றது. இதனையடுத்து, உலக நாடுகள் தங்களது நாட்டு பிரஜைகளை அழைத்து வருகின்றது. அந்த வகையில் அங்கு பல்கலைகழகங்களில் பயின்ற இலங்கை மாணவர்களையும் அழைத்து  செல்வததற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

 

அவ்வாறு அழைத்துச் செல்பவர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்பாமல் தியத்தலாவை இராணுவ வைத்தியசாலை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள வைத்திய முகாமில் தங்க வைத்து இரு வாரங்கள் பரிசோதித்து விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரமே தியத்தலாவ இராணுவத்தின் எஸ்.எஸ். கமாண்டோர் மேஜர் ஜெனரல் வடுகே தலைமையில் இரண்டு அறைகள் கொண்ட வைத்திய முகாமை 48 மணி நேரத்தில் தியத்தலாவ இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர்.

இலங்கை வரலாற்றிலேயே ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் வைத்திய முகாம் அமைக்கபடுகின்றமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

(க.கிஷாந்தன்)

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More