Home இலங்கைஅச்சுவேலி வல்லையில் 5 வயதுச் சிறுமி கிணற்றில் தவறி விழுந்து மரணம்…

அச்சுவேலி வல்லையில் 5 வயதுச் சிறுமி கிணற்றில் தவறி விழுந்து மரணம்…

by admin

அச்சுவேலி வல்லைப் பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. ஜெகதீஸ்வரன் அட்சயா (வயது 5) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.

வெளி முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமற்போயுள்ளார். வீட்டில் இருந்தவர்கள் சிறுமியை தேடிய போது பாதுகாப்பற்ற கிணற்றில் காணப்பட்டுள்ளார். உறவினர்கள் சிறுமியை மீட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர். எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது .

உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது . மேலதிக விசாரணைகளை அச்சுவேலி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் .

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More