Home இலங்கை68 வயதுடைய செல்லத்துரையின் உறவினர்களை காவற்துறையினர் தேடுகின்றனர்…

68 வயதுடைய செல்லத்துரையின் உறவினர்களை காவற்துறையினர் தேடுகின்றனர்…

by admin

கிளிநொச்சி ஏ-9 வீதியில் கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாகவும் இவரது சடலத்தை உறவினர்கள் பொறுப்பேற்குமாறும் கிளிநொச்சி காவற்துறையினர் கோரியுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 26ம் திகதி இரவு கிளிநொச்சி ஏ-9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தின் போது படுகாயமடைந்த முதியவர் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 31ம் திகதி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளதாகவும் கிளிநொச்சி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவரது சடலம் இது வரை எவரும் பொறுப்பேற்றுக் கொள்ளாத நிலையில் உள்ளதாவும் 68 வயதுடைய செல்லத்துரை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்றும் இவரது சடலத்தை உறவினர்கள் பொறுப்பேற்க உதவுமாறு கிளிநொச்சி காவற்துறையினர் கோரியுள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More