மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி தாராபுரம் பகுதியில் உள்ள இராணுவச் சோதனைச்சாவடியில் வைத்து சுமார் ஒரு கோடி ஐம்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (4) மாலை இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனை சாவடியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்ட போது மோட்டார் சைக்கிலில் வந்த நபர் ஒருவரை இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு சோதனைக்கு உற்படுத்திய போது மோட்டார் சைக்கிலின் ஆசனத்தின் கீழ் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வெளிநாட்டு நாணயத்தாள்கள் மீட்கப்பட்டது.
சுமார் ஒரு கோடி ஐம்பது இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள அமெரிக்க டொலர்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபரிடம் மீட்கப்பட்ட நாணயத்தாள்கள்,மற்றும் சந்தேக நபர் இராணுவத்தினரால் மன்னார் காவற்தறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மன்னார் காவற்தறையினர் குறித்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.