Home இலங்கைகிளிநொச்சி வளாக பகிடிவதை, முறைப்பாடுகள் இல்லை…

கிளிநொச்சி வளாக பகிடிவதை, முறைப்பாடுகள் இல்லை…

by admin

யாழ் . பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பகிடிவதை நடைபெற்றதாக வெளியான செய்திகள் தொடர்பில் தனக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என வடமாகாண ஆளூநர் தெரிவித்தர்.

தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “யாழ்.பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதைகள் நடைபெற்றமை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுப்பதில் சில தடங்கள் உள்ளன.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் ஒருவர் முறைப்பாடு செய்தால், அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்க ஆவண செய்வேன். பாதிக்கப்பட்ட தரப்பு தைரியமாக முன்வந்து முறைப்பாடு செய்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கினால் குற்றவாளிகளை தண்டிக்க முடியும்” என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More