Home உலகம்கொரோனா வைரஸினால் ஒரே நாளில் 242 பேர் பலி – உயிரிழப்பு 1357 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸினால் ஒரே நாளில் 242 பேர் பலி – உயிரிழப்பு 1357 ஆக அதிகரிப்பு

by admin

சீனாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 242 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1357 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் {ஹபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி 25-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.

சீனா, மலேசியா, தாய்வான், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன.

நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவில் 1,113 பேரும், ஹொங்காங் மற்றும் பிலிப்பைன்சில் தலா ஒருவரும் என மொத்தம் ஆயிரத்து 115 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி வைரஸ் பாதிப்பிற்கு ஹூபேய் மாகாணத்தில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சீனா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.  #கொரோனா  #உயிரிழப்பு  #சீனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More