ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று (18.02.20) பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலும் இன்று (18) இடம்பெறவுள்ளதாக அவர் கூறினார். அதேபோல் பிரதமருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றும் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதிதுவப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவார் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
Add Comment