289
பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதிஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாந்தை திருக்கேதீச்சர வீதியில் தற்காலிக அலங்கார வளைவானது கேதீச்சரம் சிவத் தொண்டர்களால் இன்று புதன் கிழமை (19) காலை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சிவராத்திரி தினத்தன்று உடைத்து உடைக்கப்பட்ட குறித்த அலங்கார வளைவு தொடர்பாக மன்னார் நீதி மன்றத்தில் வழக்கு விசாரனை இடம் பெற்று வந்தது.
இதே வேளை திருக்கேதீச்சர நிர்வாகம் கடந்த 6ஆம் திகதி இந்த வருடம் சிவராத்திரி விழாவை சிறப்பாக அனுஸ்ரிப்பதற்காக ஏற்கனவே வளைவு இருந்த இடத்தில் தற்காலிக வளைவு அமைப்பதற்கு நீதி மன்றில் சட்டத்தரணி ஊடாக அனுமதி கோரி இருந்தனர்.
அதற்கமைவாக மன்னார் மேல் நிதிமன்றத்தால் இன்று புதன் கிழமை (19) ஆம் திகதியிலிருந்து எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை 23 ஆம் திகதி வரையான 5 நாட்களுக்கு வளைவு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமைவாக இன்றைய தினம் புதன் கிழமை காலை குறித்த தற்காலிக அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #சிவராத்திரி #திருக்கேதீஸ்வரம் #அலங்காரவளைவு
Spread the love