Home இலங்கைவெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களிடம் திருட்டு

வெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களிடம் திருட்டு

by admin


வெளிநாட்டிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீடு பட்டப்பகலில் உடைத்து 20 பவுண் தங்க நகைகளும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் திருடப்பட்டுள்ளதாக நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரவெட்டி, சாமியன் அரசடிப் பகுதியில் நேற்று புதன்கிழமை இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தமது உறவினரின் வீட்டில் தங்கியுள்ள நிலையில் வீட்டிலுள்ள அனைவரும் முற்பகல் 10.30 மணிக்கு ஆலயத்துக்குச் சென்றுள்ளனர். அவர்கள் பிற்பகல் 1.30 மணியளவில் வீடு திரும்பிய போது, வீட்டுக்குள் உள்ள பொருள்கள் ஆங்காங்கே வீசப்பட்டிருந்தன.

வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தங்கியிருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த 20 பவுண் தங்க நகைகள், 400 ஸ்ரேலிங் பவுண்ட் நாணயத் தாள்கள், ஆயிரத்து 300 யூரோ நாணயத்தாள்கள் என்பன திருட்டுப் போயுள்ளன.

சம்பவம் தொடர்பில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.   #வெளிநாட்டிருந்து #திருட்டு  #ஸ்ரேலிங்பவுண்ட்  #யூரோ

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More