Home இலங்கையாழ்.ஸ்ரான்லி வீதி போக்குவரத்து நெரிசல்களை குறைக்க நடவடிக்கை

யாழ்.ஸ்ரான்லி வீதி போக்குவரத்து நெரிசல்களை குறைக்க நடவடிக்கை

by admin

யாழ்.நகர் பகுதியில் ஸ்ரான்லி வீதி பகுதியில் போக்குவரத்து நெரிசல்களை குறைக்கும் முகமாக யாழ்.பிரதேச செயலர் , யாழ்.மாநகர சபை ஆணையாளருடன் களத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.

ஸ்ரான்லி வீதியில் கடும் வாகன நெரிசல்கள் காணப்படுவதனால் பொதுமக்கள் போக்குவரத்தின் போது இடையூறுகளை எதிர்நோக்கி வந்தனர். போக்குவரத்து நெரிசல்களை குறைப்பது தொடர்பில் யாழ்.மாநகர ஆணையாளர்  இ. ஜெயசீலனுடன் களத்திற்கு சென்று பிரதேச செயலர் ச. சுதர்சன் நிலைமைகளை ஆராய்ந்தார்.
அதன் போது ஸ்ரான்லி வீதியில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் தமது விற்பனை பொருட்களை வீதி யோரங்களில் காட்சிப்படுத்தி வைப்பதனால் , வீதியோரங்களில் வாகனத்தை நிறுத்த முடியாமல் வீதிகளில் சாரதிகள்  வாகனத்தை நிறுத்தி வைப்பதனால் பெரும் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படுகின்றன. அதனால்  வீதியோரங்களில் பொருட்களை காட்சிப்படுத்தும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டு இனி வரும் காலங்களில் வீதியோரங்களில் பொருட்களை காட்சி ப்படுத்தினால் மாநகர சபை அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வீதியில் குறியீடுகள் மற்றும் வீதியோரங்கள் , வீதியின் மத்தியில் வெள்ளை கோடுகள் வரைவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் வீதி ஒழுங்களையும் வாகன தரிப்பிட ஒழுங்குகளையும் போக்குவரத்து  காவல்துறையினர் கண்காணிக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.  #யாழ் #ஸ்ரான்லிவீதி #போக்குவரத்துநெரிசல்
 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More