Home பிரதான செய்திகள் உமர் அக்மல் இடைநீக்கம்

உமர் அக்மல் இடைநீக்கம்

by admin


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது. கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இடைநீக்கம் செய்வதாக நேற்றையதினம் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) போட்டியின் போது அவரை சூதாட்டத்தில் ஈடுபட வைக்க சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் அணுகியுள்ள நிலையில் அதனை அவர் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் கவனத்துக்கு கொண்டு செல்ல தவறி விட்டதனாலேயே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த இடைநீக்கம் காரணமாக நேற்று தொடங்கிய பி.எஸ்.எல். போட்டியில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

இதுதொடர்பான விசாரணையின் பின்னரேயே அவருக்கு தடை விதிக்கப்படுமா என்பது தெரியவரும். 29 வயதான உமர் அக்மல் பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட், 121 ஒரு நாள் போட்டி மற்றும் 84 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  #உமர்அக்மல்  #இடைநீக்கம்  #பாகிஸ்தான்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More