225
வரலாற்று புகழ் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்று வரும் நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இன்றைய தினம் உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த நீரை திருக்கேதீஸ்வர ஆலயத்தினுள் உள்ள மகா சிவலிங்கத்திற்கு நீர்வார்த்து நெய் விளக்கு ஏற்றி வேண்டுதல்கள் மற்றும் நேத்திக்கடனை செலுத்தினர்.
அத்துடன் சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீஸ்வர திருப்பணி சபையின் ஏற்பாட்டில் பல்வேறு பட்ட இந்து கலாச்சார நிகழ்வுகள் அறநெறி சொற்பொழிவு நிகழ்வுகளும் இடம் பெற்று வருகின்றது. இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து அதிகமான பக்கத்கர்கள் இன்றைய சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது. #மன்னார் #திருக்கேதீஸ்வரம் #சிவராத்திரி #பக்தர்கள்
Spread the love