163
நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர்களை அலைபேசியில் தொடர்பு கொண்ட மோசடி நபர்கள் 14 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையில் பெற்று பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள் பலருக்கு இன்றைய தினம் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட நபர்கள் தாம் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டு உங்கள் கிராம சேவையாளர் பிரிவுகளில் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் உங்கள் கிராமத்திற்கு வரவுள்ளோம். அதற்கான செலவீன பணத்தினை “ஈசி காஸ்” மூலம் அனுப்பி வையுங்கள் என கோரியுள்ளனர்.
அதனை அடுத்து ஒரு கிராம சேவையாளர் 14ஆயிரம் ரூபாயும் மற்றையவர் 25 ஆயிரம் ரூபாய் பணத்தினை “ஈசி காஸ்” மூலம் அனுப்பியுள்ளனர். ஏனைய கிராம சேவையாளர்கள் சுதாகரித்து கொண்டு தாம் ஏமாறாமல் தப்பிக்கொண்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்நிலையத்தில் ஏமாற்றப்பட்ட கிராம சேவையாளர்கள் முறைப்பாடு பதிவு செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். #கிராமசேவையாளர்கள் #ஏமாற்றிய #கில்லாடிகள் #நல்லூர்
Spread the love