Home இலங்கைமருதனார்மடத்தில் கைதான இளைஞர்கள் விடுவிப்பு…

மருதனார்மடத்தில் கைதான இளைஞர்கள் விடுவிப்பு…

by admin

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 41 இளைஞர்களும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று சுன்னாகம் காவற்துறையினர் தெரிவித்தனர். நேற்றிரவு 10 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 41 இளைஞர்களும் இன்று அதிகாலை ஒரு மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

“இராணுவத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 41 பேரும் சந்தேகத்தின் அடிப்படையில் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இராணுவ அலுவலகரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.

சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்ற வழக்குகள் உள்ளனவா? பிடியாணை உள்ளனவா? என்பது பெரும் குற்றப் பிரிவு காவற்துறைப் பொறுப்பதிகாரியிடம் கோரப்பட்டது. அவ்வாறான ஒன்றும் இல்லை என்ற காரணத்தால் 41 பேரும் விடுவிக்கப்பட்டனர்” எனவும் காவற்துறையினர் கூறினர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More