தேசிய சமாதான கூட்டணியை வழிநடத்திச் செல்லும் அதிகாரங்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கூட்டணியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும்; குறித்த கூட்டணியின் மத்திய செயற்குழுவை நியமிக்கும்போது 60 வீதமானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் 40 வீதமானவர்கள் பங்காளி கட்சிகளிலிருந்தும் தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐ.தே.கவிலிருந்து கூட்டணியின் மத்திய குழுவுக்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களை தீர்மானிக்கும் அதிகாரங்கள் ஐ.தே.க தலைமைத்துவத்துக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #தேசியசமாதானகூட்டணி #அதிகாரங்கள் #சஜித்பிரேமதாச