Home பிரதான செய்திகள் பரகுவேயில் ரொனால்டினோ  கைது

 பரகுவேயில் ரொனால்டினோ  கைது

by admin


போலியான ஆவணங்களை பயன்படுத்தி பராகுவே நாட்டிற்குள் நுழைந்ததற்காக பிரேசிலின் பிரபல முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் ராபர்டோ டி அசிஸ் ஆகியோர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பராகுவே சிறையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

பராகுவே நாட்டில் நடைபெறவிருந்த குழந்தைகளுக்கான கால்பந்தாட்ட கழகம் ஒன்றின் நிகழ்ச்சிக்காக சென்றிருந்த ரொனால்டினோவும் அவரது தம்பி ராபர்டோ டி அசிசும் ஒரு விடுதியில் தங்கியிருந்த போது அங்கு திடீரென நடைபெற்ற சோதனை நடவடிக்கையின் போது போலியான ஆவணங்களை பயன்படுத்தி நாட்டுக்குள் வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதனையடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் 2015ம் ஆண்டு குய்பா ஏரியில் பாதுகாப்பு பகுதியில் சட்ட விரோதமாக மீன்பிடி வலையை கட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு தண்டனையாக இருவருக்கும் சேர்த்து 8.5 மில்லியன் டொலர் அபாரதம் விதிக்கப்பட்டது.  அபாரத்தை செலுத்த தவறியதால் பிரேசில் உயர் நீதிமன்றம் ரொனால்டினோவை நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 2002-ம் ஆண்டு உலகக் கிண்ணத்தினை பிரேசில் அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்துள்ள 39 வயதான ரொனால்டினோ 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பிபா விருதினையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  #பரகுவே #ரொால்டினோ  #கைது #போலியானஆவணங்கள்  #கால்பந்தாட்ட

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More