193
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலி சிறப்புற இன்று (07) நடைபெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் ,காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் , இந்தியா சிவகங்கை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை லூர்துராஜா, தஞ்சாவூர் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் மற்றும் இலங்கை இந்திய குருக்கள் இணைத்து கூட்டுத்ததிருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.
இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுத்தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன், இந்திய துணைத்தூதுவர் பாலசுப்ரமணியம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், முப்படைகளின் தளபதி றியல் அட்மிரல் ரவி விஜயகுணரத்ன, யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் றுவன் வணிகசூரிய, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை இந்திய பக்தர்கள் சுமார் 7000ற்கும் மேற்பட்டோர் கச்சதீவு புனித அந்தோனியார் திருப்பலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். #கச்சதீவு #புனிதஅந்தோனியார் #பக்தர்கள்
Spread the love