Home இலங்கைஊடகவியலாளர்களுக்கு ஒரு மில்லின் உயிர்க் காப்புறுதி அறிமுகம்…

ஊடகவியலாளர்களுக்கு ஒரு மில்லின் உயிர்க் காப்புறுதி அறிமுகம்…

by admin

ஊடகவியலாளர்களுக்கான காப்பறுதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மன்றக் கல்லூரியில் இது தொடர்பான நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. 2020 அரி மக அமைப்பு ஆசிய ஊடக மற்றும் கலாச்சார சங்கம் பெயார் வ்ஸ்ட் காப்பறுதி நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து இதனை முன்னெடுத்துள்ளன.

இந்தக் காப்புறுதி முறையின் கீழ் ஊடகவியலாளர்களுக்காக வருடத்தில் 985 ரூபா செலுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு மில்லின் ரூபா பெறுமதியான உயிர் காப்புறுதி கிடைக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கட்டிருப்பதாக 2020 அரிமஹ அமைப்பின் தலைவர் கனிஸ்க டி சில்வா இந்த நிகழ்வின் போது தெரிவித்தார்.

இதில் உரையாற்றிய ஆசிய ஊடக மற்றும் கலாச்சார சங்க தலைவரும் ஊடகவியலாளருமான உபுல் ஜனக ஜயசிங்க பல்வேறு தடைகளுக்கு மத்தியில் இதனை வெற்றிகொள்ள தமது சங்கத்தினால் முடிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தின் ஊடகவியலாளர் அடையாள அட்டையை கொண்டுள்ளவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும். 077 3945325 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொண்டு இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More