Home இலங்கைஆசிரியரின் தாலிக்கொடி – சங்கிலி வழிப்பறி

ஆசிரியரின் தாலிக்கொடி – சங்கிலி வழிப்பறி

by admin

பாடசாலை முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆசிரியரின் தாலிக்கொடி மற்றும் சங்கிலி என்பவற்றை பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர்.

திருநெல்வேலி பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர் நாவற்குழி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்து வருகின்றார். நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழமை போன்று பாடசாலை முடித்து , திருநெல்வேலியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்கள் ஆசிரியரை வழிமறித்து தாலிக்கொடி மற்றும் சங்கிலி என்பவற்றை அறுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண  காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில்  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை நல்லூர் – செம்மணி வீதியில் மதியம் மற்றும் இரவு நேரங்களில் வீதியில் ஆள்நடமாட்டம் குறைவாக காணப்படும் வேளைகளில் வீதியில் பயணிப்போரிடம் அப்பகுதியில் நடமாடும் வழிப்பறி கொள்ளையர்கள் , வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் பலரும் காவல்துறையினருக்கு அறிவித்த நிலையிலும் , காவல்துறையினரால் வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்ய முடியவில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது #ஆசிரியர்  #தாலிக்கொடி  #சங்கிலி #வழிப்பறி  #செம்மணிவீதி
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More