Home இலங்கைவடமாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டு

வடமாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டு

by admin

வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பீ எஸ் எம் சார்ள்ஸ் சிறப்புப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் ஏற்படகூடிய ஆபதில் இருந்து எமது மாணவ சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் இன்று முதல் ஏப்ரல் 20ஆம் திகதிவரை இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மாணவர்களுடைய நலனை மேலும் உறுதிபடுத்தும் பொருட்டு வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பீ எஸ் எம் சார்ள்ஸ் சிறப்புப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ் ஒழுங்கினை உள்ளூராட்சி சபைகள் (மாநகர சபை, நகரசபை, பிரதேச சபைகள்) உரிய முறையில் மேற்பார்வை செய்து அர்ப்பணிபுடன் இதனை நடை முறை படுத்தும்படியும் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வடமாகாண ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்- என்றுள்ளது.  #தனியார்  #கல்விநிலையங்கள்   #பூட்டு  #பீஎஸ்எம்சார்ள்ஸ்  #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More