Home உலகம்பிரித்தானியாவில் கொரோனா உயிரிழப்பு 10 ஆக உயர்வு – பாதிக்கப்பட்டவர்கள்  590 ஆக உயர்வு

பிரித்தானியாவில் கொரோனா உயிரிழப்பு 10 ஆக உயர்வு – பாதிக்கப்பட்டவர்கள்  590 ஆக உயர்வு

by admin


பிரித்தானியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 590 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர், ஒரே நாளில் 134 அதிகரித்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன்   மேலும்  இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இதனையடுத்து பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

89 வயது பெண் ஒருவர் சேரிங் கிராஸ் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மற்றையவர் தனது அறுபதுகளில், எசெக்ஸில் உள்ள குயின்ஸ் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் காரணமாக உயரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது   #பிரித்தானியா #கொரோனா #உயிரிழப்பு   #உயர்வு  #பாதிக்கப்பட்டவர்கள்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More