Home இலங்கைடக்ளஸ் தேவானந்தா நிந்தவூர் பகுதிக்கு திடீர் பயணம்

டக்ளஸ் தேவானந்தா நிந்தவூர் பகுதிக்கு திடீர் பயணம்

by admin

பாறுக் ஷிஹான்-

கிழக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதிக்கு திடீர் பயணம் மேற்கொண்டிருந்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை(15) காலை 9 மணியளவில் குறித்த பகுதியில் இடம்பெறும் கடலரிப்பு தொடர்பாக நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளர் வை.எல் சுலைமாலெப்பை விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு சென்று பார்வையிட்டார்.

மேலும் நிந்தவூர் மீனவர்களின் தேவைக்கென ஏற்கனவே அமைக்கப்பட்டு இயங்காநிலையில் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் அதனை உடனடியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.  #டக்ளஸ்தேவானந்தா  #நிந்தவூர் #பயணம்

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More