‘வன்முறையற்ற சிந்தனையால் எழுவோம் ‘என்றதொனிப்பொருளில் 2020 மார்ச் 08 பெண்கள் தினவிழாவை முன்னிட்டு, நுண்கலைத்துiறை, கலைகலாசாரப்பீடம், கிழக்குப்பல்கலைகழகம், ஏற்பாடு செய்திருந்த ஓவியக்காட்சிப்படுத்தலும் ஆற்றுகையும் நிகழ்வானது, இன்று (2020,03,13)கிழக்குப் பல்பலைக்கழக கலைகலாசாரப் பீடமுன்றலில் இடம் பெற்றது. எமது சூழலில் வன்முறைஎன்பதுமிகவும் பழகிப்போனவிடயமாக இருக்கின்றஅதேவேளை, வன்முறை என்பதுபோர் வன்முறைமுதல் குடும்பவன்முறைவரையாக இன்றளவிலும் பரந்துவிரிந்தள்ளநிலையினைக் காணமுடிகின்றது. எனினும், வன்முறைபற்றிய விளக்கங்களும், வியாக்கியானங்களும், வன்முறையைக் கட்டுப்படுத்துவற்கான சட்டங்களும் பாதுகாப்புஏற்பாடுகளுங்கூட விழிப்புணர்வுடன் முன்னெடுக்கப்படுவதையும்சமகாலத்தில் அவதானிக்கக்கூடும்.
ஆயினும்,சமூக,சமய,பண்பாட்டுஆதிக்கங்களுக்கூடாகபுனிதம் என்றபெயர்களின் வாயிலாகமுன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் எந்தவகையில் வன்முறையைத் தூண்டுவதாகவும்,வளர்ப்பதாகவும் காணப்படுப்படுகின்றதுஎன்பதனைவிளங்கிக் கொள்வதும் எதிர்கொள்வதும் சிரமமாகும். சமூக,சமய,பண்பாட்டுஆக்கநிலையைக் கருத்திற் கொண்டுவிடயங்களைவெளிப்படுத்துவதும் ஆபத்தானதாகவேகொள்ளப்படுகின்றது.
இந்நிலையில் வன்முறைஎன்றேஅடையாளம் காணாதுஅன்பு,பாசம்,கட்டுப்பாடு,ஒழுங்குஇபுனிதம் என்ற இன்னோரன்னபெயர்களில் எமதுசிந்தனையில் கலந்திருக்கும் வன்முறைக் கூறுகளை இனங்கண்டுவிடுபடுவதற்கானஉரையாடல்கள்,செயற்பாடுகள் அவசியமானவை. இத்தகையபயிற்சிகள் மனிதர்களையும் அதன் வழி சமுகங்களையும் முற்போக்குகுணம் அல்லதுமுற்போக்குநோக்குடையவையாகமாற்றுந்தன்மைமிக்கவை.இத்தகையதொருபின்னணியிலே இன்றையகாட்சிப்படுத்தல் நிகழ்வும் ஆற்றுகையும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைப்பெற்றன. குறிப்பாக ஓவியங்களாகவும், ஓவிய ஆற்றுகைகளாகவும், தாபனக்கலையாக்கமாகவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தவகையில் 2020 மார்ச் 08 பெண்கள் தினத்தைமுன்னிட்டுஏற்பாடுசெய்யப்பட்டகாட்சிப்படுத்தல்நிகழ்வு’வன்முறையற்றசிந்தனையால் எழுவோம்’என்றதொனிப்பொருளில் அமைந்திருந்தமைமிகுந்தமுக்கியத்துவம் உடையதாகநோக்கப்படுகின்றது. புதியமாணவர்கள் மீதானவதைஎன்பதுமிகவும் வலுவானபண்பாடாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பல்கலைக்கழக சூழலிலும்,பரீட்சையைமையப்படுத்திமாணவர் மீதுபிரயோகிக்கப்படும் அதிகாரவன்முறை சூழலிலும்’வன்முறையற்றசிந்தனையால் எழுவோம்’என்பதுசாலப்பொருத்தமானது. நுண்கலைத்துறைமாணவர்களதும் ஆற்றுப்படுத்தியவிரிவுரையாளர்களதும் இத்தன்மையானமுன்னெடுப்புக்கள் அவசியமானவை.
கலாநிதிசி. ஜெயசங்கர்,
முதுநிலைவிரிவுரையாளர் நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைகழகம்.