Home உலகம்கொரோனாவுக்கான தடுப்புமருந்து முதல்முறையாக அமெரிக்காவில் பரிசோதனை – நெதர்லாந்து ஆய்வாளர்களும் கண்டுபிடிப்பு

கொரோனாவுக்கான தடுப்புமருந்து முதல்முறையாக அமெரிக்காவில் பரிசோதனை – நெதர்லாந்து ஆய்வாளர்களும் கண்டுபிடிப்பு

by admin


கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து முதல்முறையாக அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வோஷிங்டனில் உள்ளசியாட்டில் நகரில் உள்ள ஒரு ஆய்வு கூடத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டு அதனை முதலில் விலங்குகளுக்கு கொடுத்து சோதித்து பார்த்ததில் வெற்றி கிடைத்தது.

இதையடுத்து இந்த தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து பார்க்கும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகியிருந்தது. இதன் நேற்று முதல் கட்டமாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 45 பேருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டது. 18 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்ட இவர்கள் கொரோனா வைரசை ஒழிப்பதற்காக தாமாக முன்வந்துள்ளனர். இவர்களில் ஜெனீபர் காலர் என்ற பெண்ணுக்கு முதல் தடுப்பு மருந்து ஊசி போடப்பட்டது.

43 வயதாகும் ஜெனீபர் 2 குழந்தைகளுக்கு தாய் ஆவார். தடுப்பு சோதனை ஊசியை போட்டுக் கொண்ட அவர் தற்போது தனிமை அறையில் வைக்கப்பட்டுள்ளார். மற்றவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஓரிரு நாட்களில் இந்த தடுப்பு மருந்து ஆய்வு முடிவுகள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படும் முழு வெற்றி கிடைக்க சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

அதேவேளை நெதர்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தின் 10 ஆய்வாளர்கள் தாங்கள் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த ஆய்வு குழுவினர் கொரோனா வைரசின் முதல் 6 பிரிவுக்கும் மருந்து கண்டுபிடித்த நிலையில் இதனை அறிவித்துள்ளனர்.

இதன் அடுத்த கட்ட ஆராய்ச்சியை கடந்த சில மாதங்களாக இவர்கள் செய்து வந்திருந்தநிலையில்தான் தற்போது 7-வது வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

அந்த தடுப்பு மருந்தை எலியிடம் செலுத்தி ஆய்வு செய்ததில் வெற்றி கிடைத்தையடுத்து கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது கொரோனாவுக்கான தடுப்புமருந்து முதல்முறையாக அமெரிக்காவில் பரிசோதனை – நெதர்லாந்து ஆய்வாளர்களும் கண்டுபிடிப்பு#கொரோனா #தடுப்புமருந்து #அமெரிக்கா #பரிசோதனை #நெதர்லாந்து

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More