Home இலங்கைலண்டனில் இருந்து சென்ற  வயோதிபப்பெண் வைத்தியசாலையில்

லண்டனில் இருந்து சென்ற  வயோதிபப்பெண் வைத்தியசாலையில்

by admin

லண்டனில் இருந்து சென்ற  வயோதிபப் பெண் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரே, இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில், லண்டன் நாட்டிலிருந்து  சென்ற  அவர், அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், தனக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தில், அவரது உறவினர்கள் ஊடாக , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.  #லண்டன்   #வயோதிபப்பெண் #யாழ்ப்பாணம்  #போதனாவைத்தியசாலை #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More