Home இலங்கையாழ் தேர்தல் மாவட்டத்தில் முக்கிய கட்சிகள்  வேட்புமனுக்கள் தாக்கல்

யாழ் தேர்தல் மாவட்டத்தில் முக்கிய கட்சிகள்  வேட்புமனுக்கள் தாக்கல்

by admin

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, யாழ்ப்பாணம்- கிளிநொச்சி இணைந்த யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் கட்சிகளின் சார்பில் முதன்மை வேட்பாளர்கள் வேட்புமனுகளைக் கையளித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சோ சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், பா.கஜதீபன், கு.சுரேந்திரன், திருமதி சசிகலா ரவிராஜ், இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் தபேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேட்பு மனுவைக் கையளித்தார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் தலைவரும் முதன்மை வேட்பாளருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  #யாழ் #தேர்தல்  #வேட்புமனுக்கள்     #தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு #தமிழ்தேசியமக்கள்முன்னணி
 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More