Home இலங்கைகேப்பாபிலவு விமானப்படைத்தளம் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டது..

கேப்பாபிலவு விமானப்படைத்தளம் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டது..

by admin

முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளம் கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து சென்ற ஒரு தொகுதியினர் அ ங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 29 பெண்களும் 12 ஆண்களும் ஆக 41 பேர் நேற்று (20.03.20) மாலை அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இந்தியாவிலிருந்து சென்றவர்களை 14 நாட்களுக்கு தனிமைப் படுத்துவதற்காக முல்லைத்தீவு கேப்பாபிலவில் விமானப்படை தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு இவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கில் கொரோனா பரிசோதனை நிலையங்கள் அமைப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புக்களை வெளியிட்டு வந்த நிலையிலும் தற்போது வடக்கு கிழக்கை இலக்காக வைத்து இவ்வாறானவர்கள் கொண்டு செல்லப்படுதற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More