Home இலங்கைதனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து 208 பேர் இன்று வெளியேற்றம்

தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து 208 பேர் இன்று வெளியேற்றம்

by admin

கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து சிசிச்சை பெற்று வந்த மேலும் 208 பேர் இன்று (25) அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிசிச்சை பெற்றுவந்த சுமார் 313 பேர் நேற்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 208 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படாத நபர்கள் தொடர்பில் இன்று முதல் காவல்துறையினருடன் இணைந்து சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பிரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்ர பாலசூரிய தெரிவித்துள்ளார்.  #தனிமைப்படுத்தல்  #வெளியேற்றம்  #சவேந்திரசில்வா  #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More