உலகம் பிரதான செய்திகள்

கொரோனா உலகளவில் 24 ஆயிரத்தும் மேல் பலி – ஒரே நாளில் இத்தாலியில் 721 – ஸ்பெயினில் 498 பிரான்சில் 365 பேர் பலி

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவில் உருவான உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகின்ற நிலையில் தினந்தோறும் மக்கள் அதிகளவில் பலியாகின்றனர். இதனால் உலக அளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 3 ஆயிரம் பேர் இந்த கொடிய நோயால் பலியாகினர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதே போல் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 721 பேரும் ஸ்பெயினில் 498 பேரும் பிரான்சில் 365 பேரும் பலயாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது  #கொரோனா  #பலி  #இத்தாலி #ஸ்பெயின் #பிரான்ஸ்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap