Home இலங்கைஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்

by admin

கொழும்புகம்பஹாகளுத்துறைபுத்தளம்கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளைமார்ச் 30 திங்கள் காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் அடுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தில் அகுரணை கிராமங்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.  #ஊரடங்கு  #கொழும்பு #யாழ்ப்பாணம்  #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More