Home இலங்கையாழ் சிறைச்சாலையிலிருந்து 110 பேர்  சொந்தப்பிணையில் விடுவிப்பு

யாழ் சிறைச்சாலையிலிருந்து 110 பேர்  சொந்தப்பிணையில் விடுவிப்பு

by admin

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 110 சந்தேக நபர்கள் பிணையில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடுமுழுவதும் சிறைச்சாலைகளில் உள்ள விளக்கமறியல் சந்தேக நபர்களை விடுதலை செய்து சிறையில் உள்ள நெருக்கடியை குறைப்பதற்கு சிறைச்சாலை திணைக்களம் ஜனாதிபதி ஊடாக நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கடந்த சில தினங்களில் மட்டும் 110 சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டடுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறு குற்றங்கள் புரிந்த நீதிமன்றங்களால் பிணை வழங்கப்பட்டு அவற்றை நிறைவு செய்ய முடியாது சிறையில் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டிருந்த 110 சந்தேக நபர்களே சொந்தப் பிணையில் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்  #யாழ்  #சிறைச்சாலை  #சந்தேகநபர்கள்   #பிணை #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More