Latest News
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு...
ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீது ஈரானிய...
அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக மூன்றாவது நாள் தாக்குதல்களை நிறைவு...
சவுதியின் அபா விமான நிலையம் மீது ஹூதி ஏவுகணை, ட்ரோன்...
பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: சமூக வலைத்தளப் பதிவுகளை உடனடியாக...
வலி. வடக்கில் ராணுவத்தினர் மரக்கறி விற்பனை செய்யும் ஆதாரக் காணொளியை...
அமிர்தலிங்கத்தின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்:
  தமிழ் மொழி மூல காவற்துறையினருக்கான உன்னத விசேட செயலமர்வு!
பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்; ஜூலை 24 வரை மட்டக்களப்பு நீதிமன்றம்...
யோஷித ராஜபக்ஷவின் பணமோசடி வழக்கு: முன்னாள் காதலி யசரா அபேநாயக்க...
  • English
  • සිංහල
  • Contact
Global Tamil News
Banner
Global Tamil News
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பெண்கள்
  • இலக்கியம்
  • ஏனையவை..
    • முஸ்லீம்கள்
    • புலம்பெயர்ந்தோர்
    • மலையகம்
    • கேலிச்சித்திரம்
    • பேட்டிகள்
      • காணொளிகள்
      • ஒலி வடிவம்
    • மௌனம் கலைகிறது
Home இலங்கைதென்பகுதியிலிருந்து பொருட்களுடன் மன்னாரிற்கு வரும் லொறிகளை   உயிலங்குளத்துடன் மட்டுப்படுத்த நடவடிக்கை :
இலங்கைபிரதான செய்திகள்

தென்பகுதியிலிருந்து பொருட்களுடன் மன்னாரிற்கு வரும் லொறிகளை   உயிலங்குளத்துடன் மட்டுப்படுத்த நடவடிக்கை :

by admin April 3, 2020
written by admin April 3, 2020
327
தென் பகுதியில் இருந்து பொருட்களுடன் மன்னாரிற்கு வருகின்ற லொறிகளை மன்னார் மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் 9 ஆம் கட்டை பகுதியுடன்   கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மன்னார் மாவட்டத்தின் அவசர நிலமைகள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று (3) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்றது.
 குறித்த கலந்துரையாடலில் வன்னி பிராந்திய பிரதி காவல்துறைமா அதிபர்,இராணுவ,கடற்படை காவல்துறை அதிகாரிகள்,பிரதேசச் செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது மாவட்டத்தில் தற்போதைய அவசர நிலமையின் போது முன்னெடுக்கப்பட்டு வந்த,முன்னெடுக்கப்பட வேண்டிய விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தென் பகுதியில் இருந்து கொண்டு வருவது தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும்  உரிய அதிகாரிகளின் வேண்டு கோளுக்கு அமைவாக வெளி மாவட்டங்களில் இருந்து மன்னாரிற்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருபவர்களை நேரடியாக மன்னாரிற்குள் நுழைய அனுமதிக்காது மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
தென் பகுதியில் இருந்து பொருட்களுடன் மன்னாரிற்கு வருகின்ற லொறிகள் உயிலங்குளம் 9 ஆம் கட்டை பகுதியில் உள்ள பாடசாலையில் நிறுத்தி, பின்னர் குறித்த லொறி கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மன்னாரில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு பிறிதொரு சாரதியின் உதவியுடன் குறித்த லொறி மன்னாரிற்குள் கொண்டு வரப்பட்டு பொருட்களை வியாபார நிலையங்களுக்கு வழங்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நடவடிக்கைக்கு வன்னி மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் மற்றும் இராணுவ அதிகாரி ஆகியோர் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தனர்.  இந்த நிலையில் குறித்த செயல் பாடு பிரதேச செயலாளர் மற்றும் உரிய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நாளை சனிக்கிழமை(4)   முதல் நடை முறைப்படுத்தப்படவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த வர்த்தகர்களும் குறித்த நடவடிக்கைக்கு பூரண சம்மதத்தை தெரிவித்துள்ளனர். எதிர் வரும் இரண்டு வாரங்கள் மிக கடினமான வாரங்களாக அமைய உள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றவர்களினால் மன்னார் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு ‘கொரோனா’ வைரஸ் பரவலாம் என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து குறித்த நடை முறையினை எதிர் வரும் இரண்டு வராங்களுக்கு நடை முறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் இதன் போது தெரிவித்தார்.  மேலும் அலுவலகர்களுக்கான பாஸ் நடை முறை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக முக்கியமாக கடமைகளில் ஈடுபடுகின்ற உத்தியோகத்தர்களை அதற்கு பொறுப்பான கிளைத் தலைவர்கள் மற்றும் உரிய பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் காவல்நிலையத்திற்கு சமர்ப்பிக்கின்ற போது காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் ஊடாக பாஸ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. -மேலும் விவசாயத்தை முதன்மை படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து நீடிக்குமாக இருந்தால் மன்னார் மாவட்ட மக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றது.
எனவே நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் வகையிலும்,உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலும் விவசாயிகளை விவசாயத்தில் ஈடுபட வைக்கும் வகையில் காவல்துறை ஊரடங்குச் சட்டத்தின் போது அவர்களுக்கும் பாஸ் வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டது.
 பிரதேசச் செயலாளர்கள் ஊடாக காவல்நிலைய பொறுப்பதிகாரிகளினால் விவாசாயிகளுக்கு பாஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  #தென்பகுதி #மன்னார் #லொறி  #உயிலங்குளம் # கொரோனா
 
Spread the love
 
 
 Tweet     
உயிலங்குளம்கொரோனாதென்பகுதிமன்னார்லொறி
0 comments 0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
அமேசனில் பழங்குடியின செயற்பாட்டாளர் சுட்டுக்கொலை
next post
உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

Related News

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு...

July 14, 2026

ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீது ஈரானிய...

July 14, 2026

அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக மூன்றாவது நாள் தாக்குதல்களை நிறைவு...

July 14, 2026

சவுதியின் அபா விமான நிலையம் மீது ஹூதி ஏவுகணை, ட்ரோன்...

July 14, 2026

பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: சமூக வலைத்தளப் பதிவுகளை உடனடியாக...

July 13, 2026

வலி. வடக்கில் ராணுவத்தினர் மரக்கறி விற்பனை செய்யும் ஆதாரக் காணொளியை...

July 13, 2026

அமிர்தலிங்கத்தின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்:

July 13, 2026

  தமிழ் மொழி மூல காவற்துறையினருக்கான உன்னத விசேட செயலமர்வு!

July 13, 2026

யோஷித ராஜபக்ஷவின் பணமோசடி வழக்கு: முன்னாள் காதலி யசரா அபேநாயக்க...

July 13, 2026

பிரித்தானியாவில் வாழ்பவர்களின் கவனத்திற்கு!

July 13, 2026

Recent Posts

  • நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு அதிகாரிகள் பலி – மொத்த மரணங்கள் 31 ஆக உயர்வு! July 14, 2026
  • ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீது ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி, 8 பேர் காயம்! July 14, 2026
  • அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக மூன்றாவது நாள் தாக்குதல்களை நிறைவு செய்தது! July 14, 2026
  • சவுதியின் அபா விமான நிலையம் மீது ஹூதி ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் – 4 ஆண்டுகளாக நீடித்த அமைதி முறிவடைந்ததா? July 14, 2026
  • பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: சமூக வலைத்தளப் பதிவுகளை உடனடியாக அகற்றுமாறு  நீதிமன்றம்  உத்தரவு! July 13, 2026




  • English
  • සිංහල
  • Contact

@2023 - Global Tamil News, All Right Reserved.

Global Tamil News
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பெண்கள்
  • இலக்கியம்
  • ஏனையவை..
    • முஸ்லீம்கள்
    • புலம்பெயர்ந்தோர்
    • மலையகம்
    • கேலிச்சித்திரம்
    • பேட்டிகள்
      • காணொளிகள்
      • ஒலி வடிவம்
    • மௌனம் கலைகிறது
Global Tamil News
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பெண்கள்
  • இலக்கியம்
  • ஏனையவை..
    • முஸ்லீம்கள்
    • புலம்பெயர்ந்தோர்
    • மலையகம்
    • கேலிச்சித்திரம்
    • பேட்டிகள்
      • காணொளிகள்
      • ஒலி வடிவம்
    • மௌனம் கலைகிறது
@2023 - Global Tamil News, All Right Reserved.

Read alsox

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்று வந்த மேலும்...

July 14, 2026

ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீது...

July 14, 2026

அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக மூன்றாவது நாள் தாக்குதல்களை...

July 14, 2026

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More