145
பிரித்தானியாவில் தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக மிகப் பெரிய புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
கிழக்கு லண்டனில் இருக்கும் எக்செல் எனப்படும் கண்காட்சி அரங்கமே, தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. 4000 படுக்கை வசதிகள் கொண்ட இந்த நைட்டிங்கேள் மருத்துவமனை ஒன்பதே நாட்களில் கட்டப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை இளவரசர் சாள்ஸ் அதனை திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை, நாட்டின் அரச படைகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகியோரின் உதவியோடு கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மேலும் 3 மருத்துவமனைகள் புறநகரப் பகுதிகளிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
Spread the love