Home இலங்கையாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா – இலங்கை எண்ணிக்கை 159ஆகியது….

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா – இலங்கை எண்ணிக்கை 159ஆகியது….

by admin

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சுவிஸ் போதகருடன் தொடர்பினை பேணியதாக பலாலியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மேலும் 10 பேருக்கான பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அவற்றுக்கான ஆய்வுகூடப் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன. அந்த முடிவுகளின்படி அவர்களில் மூவருக்கு தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். அதேவேளை இதுவரையில் யாழ்ப்பாணத்தில் 7 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159ஆக உயர்ந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More