உலகத்தைப் படிக்கும் காலம்
உள்ளுறைந்து
உலகத்தைப் படிக்கும் காலம்…
மனிதர்கள் இல்லாதுபோகும் உலகை
கற்பனை செய்வது எளிதாகி வருகிறது….
அவலங்களும், அனர்த்தங்களும்
இயல்பான வாழ்க்கை ஆகிவிட்ட..
மனித சமூகங்களும்
ஆச்சரியமுறும் காலம்…..
குத்துமதிப்பாகவே, எதிர்க்கொள்ளப்பட்டு
வருகிறது ஆபத்து…
உலகத்தைப் படிக்கும் காலம்
உள்ளுறைந்து
உலகத்தைப் படிக்கும் காலம்…
கண்டம்விட்டு கண்டம்பாயும்
கோளம்தாண்டி கோளம் பாயும்
வித்தையறிந்த வீறாப்பு…
வரலாறு கொண்ட
கொள்ளை நோய்களை
கவனத்திற் கொள்ளாத செய்தி ஏதோ?
உலகத்தைப் படிக்கும் காலம்
உள்ளுறைந்து
உலகத்தைப் படிக்கும் காலம்….
ஆதிக்க நோக்கங்கள் ஆழ்ந்தகன்று அறிவோம்!
வாழ்வு செய்வோம் நல்வாழ்வு செய்வோம்!
உலகம் எல்லாம் தழைத்தோங்க
வாழ்வு செய்வோம்!
மனிதர் நாங்கள் வாழ்வு செய்வோம்!.
சி.ஜெயசங்கர்.
காலம் வாய்ப்பாகி இருக்கிறது…
ஆழமானதும் நுண்ணிதானதுமான
வாசிப்பிற்குஉரியதாகி இருக்கின்றஉலகில்
பரீட்சைக்கானபாடத்திட்டவாசிப்புக்குள்,
மூழ்கடிக்கமுனைகிறதுமுறைமை.
தன்னைஅறியும், சூழலைஅறியும்
தன்னில் சூழலை, சூழலில் தன்னை
அறிதலின் வாசிப்பு
கல்வியாகிமலர்கஅறிவு
காலம் வாய்ப்பாகி இருக்கிறது.
முகவர்கள் செயலற்றுப் போயினர்
முகவர் நிலையங்கள் செயலிழந்துபோயின.
நம்பிக்கையி;ன் பிறப்பிடம்
மீளவும்,துளிர்க்கவும்,தளைக்கவும்
காலம் வாய்ப்பாகி இருக்கிறது.
உள்ளம் பெரும் கோயி;ல் ஆகிறது
புத்தியில்,அறிவுஆலயம் ஆகிறது.
உடலும் உள்ளமும்,புத்தியின் சக்தியும்
ஆக்கவும் காக்கவுமான,
உணவேமருந்தாகியஅறிவுமுறை
காலனியம் புதைத்துவைத்த,
நவீனபுதைகுழியில் இருந்து
மீண்டுஎழுகிறது.
காலம்!வாய்ப்பாகி இருக்கிறது.
அறிவும்,உணர்வும்,அனுபவமும்
இணைந்தஅறிவுப்பெருஞ்சுடர் படர்க!
ஆக்குதல் காத்தல் அணையாதுஒளிர்க!
காலம்!வாய்ப்பாகி இருக்கிறது….
சி.ஜெயசங்கர்.
மண்ணில் நல்லவண்ணம்வாழ…
வேகமாய் மிகவேகமாய்
விரைந்துவளர்கிறதுஉலகம்.
ஈடுக்கொடுத்துப் போகவில்லையெனில்,
இருப்பற்றுப் போய்விடுவீர்!
விற்பனர் எச்சரிப்பில்
விதிர்விதிர்த்தோம் வேகங்கொண்டோம்!
ஏனென்றும்தெரியவில்லை.
எதற்கென்றும் புரியவில்லை.
விதிர்விதித்தோம் வேகங்கொண்டோம்!
வீடுவாசல்,தொழில்,சொத்து,
சேமிப்பு,காப்புறுதி,கட்டுப்பணம்
சுற்றம் சுழன்றடிக்கும் வாழ்வில்
விருத்திகண்டோம்.
கேள்வியற்ற
கனவுவாழ்க்கைவிருத்தியின்
வேகச்சூழலில்
அளவற்றுஅள்ளுண்டோம் .
இயற்கையின் நுண்துளிர்ப்பில்
வேகங்கெட்டுஉலகமேஅடக்கம்.
தனித்துகிடக்கின்றோம்
ஏது செய்வதென்றுஅறியாமல்!
நின்றுபோய்விட்டஓட்டத்தில்
வெளிப்பட்டது,
இலக்கற்றஓட்டம்,
பாதுகாப்பற்றவாழ்வு.
அதிகாரம் நிலைநிற்க,
அதலபாதாளம் தேடி,
எதிரிகளை இலக்குவைக்கும்
அதிநுட்பஆயுதங்கள்
தும்மலுக்கும் இருமலுக்கும்
முகமழிந்துகிடக்கின்றன.
மண்;ணில் நல்லவண்ணம் வாழ…
உடலெதிர்ப்புசக்திகளே
பாதுகாப்பாம் மனிதருக்கு,
சி.ஜெயசங்கர்.
தம்நலனெனில் எவரையும் கைவிடுவர் இவர்;….
உயிர் காக்கப்போரிடுவோர்,
உரிமைகாக்கப்போரிடுவோர்
துச்சமில்லை இவர்க்கு.
தம் நலனெனில்,
எவரையும் கைவிடுவர்
இவர்கள்…..
நண்பர்கள்,எதிரிகள்,
தியாகிகள்,துரோகிகள்,
சனநாயகவாதிகள்,பயங்கரவாதிகள்
அழுத்தமாகக் கட்டமைத்த,
அச்சுறுத்தும் பிரிகோடுகள்
கலங்கிமறையும்
காலம் நிகழ்கிறது….
தெய்வங்கள் என்றும்,
தியாகிகள் என்றும்
போற்றித் துதிபாடி
பிரலாபித்துத் திரிவாரெனினும்,
தம் நலனென்றுவருமெனில்,
எவரையும் கைவிடுவர்
இவர்கள்.
சி.ஜெயசங்கர்.
விபத்தாய் வாய்க்கப்பெற்றது…
முகவர்கள் அற்ற,
கூடகோபுரங்கள் அற்ற,
புராதனமான,
ஆதியானநம்பிக்கை
விபத்தாய் வாய்க்கப் பெற்றது.
தனித்துவிடப்பட்டதன்
அச்சத்தில்,மரணபயத்தில்
கேள்விக்குறிஆகிவிட்ட
நாளைஎன்றதேவை,
மனதிலும்,புத்தியிலும்
சுடர் விட்டுப் படர்ந்துபிரகாசிக்கும்
புராதனமான,
ஆதியானநம்பிக்கை
விபத்தாய் வாய்க்கப்பெற்றது.
மனிதரில் இயற்கையும்
இயற்கையில் மனிதரும்
துளிர்;தலும்,உதிர்தலும்
வாழ்தலும்,வீழ்தலும்
நெஞ்சுறைய
விகசிக்கும் புத்தியில்
தன்னை,
பிறரை,
சமூகங்களை,
முழு உலகை
அதற்கும் அப்பால்….
கனவுகாணும்
கற்பனைபண்ணும்
சிந்திக்கச் செய்யும்
வாய்ப்பு
விபத்தாய் வாய்க்கப் பெற்றது….
சி.ஜெயசங்கர்