உலகம் பிரதான செய்திகள்

“சிறந்த நாட்கள் மீண்டும் வரும், நாங்கள் மீண்டும் எங்கள் நண்பர்களுடன், குடும்பங்களுடன் இருப்போம், நாங்கள் மீண்டும் சந்திப்போம்”


“நாம் இன்னும் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கும், சிறந்த நாட்கள் மீண்டும் வரும், நாங்கள் மீண்டும் எங்கள் நண்பர்களுடன் இருப்போம்; நாங்கள் மீண்டும் எங்கள் குடும்பங்களுடன் இருப்போம், நாங்கள் மீண்டும் சந்திப்போம்.” என பிரித்தானிய மஹாராணியார் பிரித்தானிய மக்களுக்கு நம்பிக்கைகளை விதைத்துள்ளார்.

68 வருடகால முடியாட்சியில் 5 ஆவது தடவை உரை நிகழ்த்திய அவர், நாட்டு மக்கள் அனைவரும் உறுதியுடன் எதிர்கொண்டால் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மேலெழுந்து வர முடியும் என நம்பிக்கை அளித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் நிகழ்த்திய உரையில், “தேசமெங்கும் வியாபித்திருந்த இரண்டாம் உலகப்போர் நெருக்கடி நிலையின் போது செயற்பட்டது போல இப்போதும் நாட்டு மக்கள் உறுதியுடன் செயற்பட்டால் கொரோனா பாதிப்புக்களில் இருந்து மீண்டு வரமுடியும்.” என உறுதியளித்துள்ளார்.

அத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் தலைமுறை தலைமுறையாக கடைப்பிடித்து வந்த தங்களது பொறுமை மற்றும் உறுதியினை மீண்டும் வெளிக்காட்டுவதற்கும் மகாராணி அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, “நம் அனைவரும் ஒன்றாக இந்நோயினைக் கையாள்கிறோம். நான் மீண்டும் உறுதியாகச் சொல்கிறேன் தொடர்ச்சியாக நாம் ஒற்றுமையாகவும் திடமாகவும் பயணித்தால் நாம் இதனை வெல்ல முடியும். நாம் ஏற்கனவே சவால்களை சமாளித்திருந்தாலும் குறித்த விடயமானது மிகவும் வித்தியாசமானது. உலக மக்கள் அனைவரையும் குணப்படுத்தும் ஓர் பொது முயற்சிக்காக விஞ்ஞானத்தின் முன்னேற்றங்களோடு, இம்முறை உலகளாவிய அனைத்து நாடுகளுடனும் நாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம். நாம் வெற்றி பெறுவோம் என்பதுடன் குறித்த வெற்றி நம் அனைவரையும் சாரும்” எனவும் தனது உரையில் வலியுறுத்தி உள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.