இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இலங்கையில் கொரோனோ வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் கல்கிஸ்ஸையைச் சேர்ந்த, மாணிக்க வியாபாரி எனவும், அவர் அண்மையில் ஜேர்மனியிலிருந்து வந்தவர் எனவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் இதுவரை 189 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்களில் 44 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #கொரோனா #இலங்கை #மரணம்
Add Comment