உலகம் பிரதான செய்திகள்

பிரித்தானியா மே வரை முடக்கம்? தளர்த்தினால் இறப்புகள் அதிகமாகும் – பிரமர் நலம் பெறுகிறார்…

The UK has been under a lockdown since 23 March. Photograph: Barcroft Media/Barcroft Media via Getty Images

பிரித்தானியாவின் முடக்த்தை தளர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டால், மேலும் அதிகளவான இறப்புகளுக்கு அவை வழிவகுக்கும் என்பதனை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில்  எதிர்வரும் மே மாதம் வரை பிரித்தானியாவின் முடக்கத்திற்கான கட்டுப்பாடுகளை நீட்டிக்க பிரித்தானிய அரசாங்கம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவின்  கொரோனா வைரஸ் முடக்கத்திற்கான  நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்வதற்காக வெளியுறவு செயலாளரும் நடைமுறை பிரதமருமான டொமினிக் ராப் இன்று காலை அவசர கோப்ரா கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

போரிஸ் ஜோன்சன் கடந்த மார்ச் 23 முதல் பிரித்தானியாவினை முடக்குவதற்கான உத்தரவினை பிறப்பித்தார். எனினும் பிரித்தானியாவின்  மிக ஆபத்தான நாளான நேற்று – 24 மணி நேரத்தில் 938 புதிய இறப்புகள் பதிவுசெய்யப்பட்டது. இந்த  நிலையில், பிரித்தானியாவின் முடக்கலுக்கான முடிவு விஞ்ஞானிகளால் வழங்கப்படும் தரவு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும் எனவும், இது அடுத்த வாரம் வரை கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை எனவும் பொருளாதார செயலர் சுனக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  முடக்கம் தொடர்பான கட்டுப்பாடுகளை அமைச்சர்கள் விரைவாக ஏற்கும் நிலை, இன்று காலை இடம்பெற்ற கோப்ரா கூட்டத்தில் காணப்பட்டதாகவும்,  ஈஸ்டர் விடுமுறைக்குப் பின் பிரித்தானியாவின் பாடசாலைகள், மீண்டும் திறக்கப்படாது என அரசாங்க தரப்பினர் ஊகிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பொரிஸ் ஜோன்சன் லண்டனின் செயின்ட் தொமஸ் மருத்துவமனையில் 3 ஆவது இரவையும் கழித்தார், அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் “உறுதியாக உள்ளார்” என்றும் கூறப்படுகிறது.

வென்டிலேட்டரைப் பயன்படுத்தாமல் சுவாசிக் முடிவதாகவும், படுக்கையில் எழுந்திருக்க முடிவதாகவும் பிரதமர் பொரிஸ் யோன்ஸன் தெரிவித்துள்ளார். எனினும் அவர் ஒரு மாதம் வரை ஓய்வில் இருக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link