Home இலங்கை வேறு மாவட்டங்களிலிருந்து வந்து யாழில் தங்கியிருப்போர் அனுமதி கிடைச்சதும் அனுப்பி வைக்க்கப்படுவர்

வேறு மாவட்டங்களிலிருந்து வந்து யாழில் தங்கியிருப்போர் அனுமதி கிடைச்சதும் அனுப்பி வைக்க்கப்படுவர்

by admin
வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தந்து யாழ்.மாவட்டத்தில் தங்கியிருப்போரை அரச உயர்மட்டத்திலிருந்து அனுமதி கிடைத்ததும் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

அது தொடர்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தின் காரணமாக வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தந்து தற்பொழுது தமது சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாது யாழ்ப்பாண மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் தாங்கள் வசித்து வரும் கிராம சேவையாளர் மற்றும் அந்தப் பிரிவு பிரதேச செயலரிடம் பதிவினை மேற்கொள்ளவேண்டும்.

வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கான அனுமதி தேசிய மட்டத்தில் வழங்கப்பட்டதன் பின்னர் பதிவு செய்தவர்களை அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்புவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு ஒவ்வொரு நாளும் வெளி மாவட்டத்திற்கு செல்வதற்கான அனுமதி கோரி பெருமளவில் மக்கள் வருவதை நாங்கள் அவதானிக்கின்றோம்.

எனவே  வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு வருகை தருவதனைத் தவிர்த்து வீடுகளில் இருங்கள் என தெரிவித்தார் வேறு மாவட்டங்களிலிருந்து வந்து யாழில் தங்கியிருப்போர் அனுமதி கிடைச்சதும் அனுப்பி வைக்க்கப்படுவர்#யாழ்  #அனுமதி  #ஊரடங்கு

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More