Home இலங்கை21 நாள்கள் முடக்கப்பட்டிருந்த தாவடி விடுவிப்பு

21 நாள்கள் முடக்கப்பட்டிருந்த தாவடி விடுவிப்பு

by admin

யாழ்ப்பாணத்தில் முதலாவதாக  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் தாவடி கிராமம் 21 நாள்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் முடக்கப்படிருந்த தாவடிக் கிராமம் கொரோனா தொற்று இல்லாத பிரதேசமாக சுகாதாரத் துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் கடந்த மார்ச் 22ஆம் திகதி  கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டாத அடையாளம் காணப்பட்டார்.

அன்றைய தினத்திலிருந்து அவரது வதிவிடத்தைச் சூழவுள்ள கிராமம் சுகாதாரத் துறையினரால் இராணுவம் மற்றும் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் முடக்கப்பட்டது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்கள் எவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நாட்டின் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய 21 நாள்களின் பின்னர் தாவடிக் கிராமம் இன்று சுகாதாரத் துறையினரால் விடுவிக்கப்பட்டது. அதனை அடுத்து அங்கிருந்து இராணுவத்தினர் வெளியேறினர்.    # முடக்கப்பட்டிருந்த  #தாவடி #விடுவிப்பு #கொரோனா

 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More