Home இலங்கைகனமழை காரணமாக   126 பேர்  பாதிப்பு – 26 பேர் தற்காலிக முகாம்களில்

கனமழை காரணமாக   126 பேர்  பாதிப்பு – 26 பேர் தற்காலிக முகாம்களில்

by admin

க.கிஷாந்தன்)

நோர்வூட்  காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட சென்ஜோன் டிலரி தோட்ட பகுதியில் பெய்த மழை காரணமாக 27 குடும்பங்களை சேர்ந்த 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முழுமையாக பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களை சேரந்த 26 பேர் தற்காலிகமாக அப்பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

(நேற்று) 14.04.2020  மாலை அப்பகுதியில் பெய்த கடும் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. குறித்த குடியிருப்புக்களின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாகவும் குடியிருப்புக்களில் இருந்த பொருட்கள் சில சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை கிராம அதிகாரி செய்து வருவதோடு, மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

மேலும், மாலை வேளைகளில் இடி, காற்றுடன் கூடிய மாலை பெய்வதால் அனைவரும் பாதுகாப்புடன், அல்லது பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்வது குறிப்பிடத்தக்கது.  #கனமழை  #முகாம்களில்  #நோர்வூட்

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More