Home இலங்கை19 மாவட்டங்களில் ஊரடங்கு இன்று தளர்வு

19 மாவட்டங்களில் ஊரடங்கு இன்று தளர்வு

by admin


கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஏனைய 19 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று(16) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதுடன், பி.ப 4.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு அமுல்படும் ஊரடங்கு உத்தரவு 20 ஆம் திகதி காலை 6.00 மணிவரை அமுலில் இருக்கும் எனவும், 20ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #ஊரடங்கு   #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More